Saturday, 18 March 2017

🕋 மார்க்க_🕌 கேள்வி எண்: 406


🕋 மார்க்க_🕌 கேள்வி எண்: 406

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *தீமை செய்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று❓*

💠 *பதில் =*
*தீமையாகவே ஆயிற்று*

*ஆதாரம் = அல்குர்ஆன்: 30:10*

📃பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
(அல்குர்ஆன் : 30:10)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல் எது என பெருமானார் கூறுகிறார்கள்❓*

💠 *பதில் =*
*"அறிக! அல்லாஹ்வைத் தவிர* *அனைத்துப்  பொருட்களுமே*
*அழியக்கூடியவையே"*

*ஆதாரம் = புகாரி 3841,6147,6489*
*முஸ்லிம்:4541,4542,4543,4544,4545*

📕6147. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன ('அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே' எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📒6489. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்தும் அழியக்கூடியவையே' எனும் பாடல்தான் கவிஞர்கள் சொன்ன வரிகளிலேயே மிக உண்மையானதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📂4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அன்சாரி - சென்னை 2
2. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
8. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
9. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம் )2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 19- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment