Saturday, 18 March 2017

🕋மார்க்க_*கேள்வி எண்: 405


🕋மார்க்க_*கேள்வி எண்: 405

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *அல்லாஹ் எவர்களுடனேயே இருப்பதாக கூறுகிறான்❓*

💠 *பதில் =*
_நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்_

*ஆதாரம் = அல்குர்ஆன்: 29:69*

📑மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எந்த செயல் முலம் செல்வங்கள் கஞ்சனிடமிருந்து ஏழைக்கு வெளிக் கொண்டுவரப்படுவதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*

💠 *பதில் =*
_நேர்த்திக்கடன்_

*ஆதாரம் = புகாரி:6608,6609,6692,6693,6694*
*முஸ்லிம்:3368,3369,3370,3371,3372,3373*

📋6608. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.18
ஸஹீஹ் புகாரி.

📁6609. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

🗂6692. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென அவர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லையா? நபி(ஸல்) அவர்கள் 'நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது' என்று கூறினார்கள். 93
ஸஹீஹ் புகாரி.

🗞6693. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)' என்றார்கள். ஸஹீஹ் புகாரி.

📄6694. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📂3368. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📖3369. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்).
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📃3370. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், "அது (விதியில் இல்லாத) எந்த நன்மையையும் கொண்டுவந்துவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📜3371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்த்திக்கடன் செய்யாதீர்கள். ஏனெனில், நேர்த்திக்கடன் விதியிலுள்ள எதையும் தடுத்து விடாது. அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📒3372. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், "அது விதியில் எதையும் மாற்றிவிடாது. அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஹுசைன் - நாகர்கோவில் 2
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
3. அப்துல் பாசித் - சவுதி 2
4. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
9. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 18- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment