*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை தொடர் - 2*
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
⭕மேலும் நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “தனது நட்பாலும்
பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார்.
என் இறைவனே! உன்னைத் தவிர
மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக்
கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன்
இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய
வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும்
அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!” (ஸஹீஹுல்
புகாரி)
*👑நான்கு நாட்களுக்கு முன்பு*
⭕மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்,
வியாழக்கிழமை நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வலி
கடுமையானது. மக்களை நோக்கி “வாருங்கள்! நான்
உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின்
ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் رضي الله عنه அவர்களும் ஒருவர். “நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வலி
அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது.
அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது”
என்று உமர் رضي الله عنه மக்களிடம் கூறினார்கள்.
இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை
நிலவியது. சிலர் “நபி صلى الله عليه وسلم நமக்கு எழுதித் தரட்டும்”
என்று கூற, மற்றும் சிலர் உமர் رضي الله عنه கூறியது போல
கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை
விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது
என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
♻அன்றைய தினம் நபி صلى الله عليه وسلم மூன்று விஷயங்களை
குறிப்பிட்டார்கள்:
1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை
அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற
வேண்டும்.
2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து
உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல்
செய்ய வேண்டும்.
3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர்
மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக
இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி
வழியையும் நன்றாகப் பிடித்துக்
கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை
அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள்
உரிமையாக்கிக் கொண்டவர்களையும்
பேணுங்கள்.
தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின்
(மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்
வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி صلى الله عليه وسلم
அவர்களே தொழ வைத்தார்கள்.
அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் ‘வல் முர்ஸலாதி
உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித்
தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *04-03-2017*

No comments:
Post a Comment