Saturday, 18 February 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" (முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
"

  📚 அல்குர்ஆன் : 4:123,124

💢💢💢💢💢💢💢💢💢💢💢
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

   " சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்."

🎭அறிவிப்பாளர் :
அபூஹுரைரா (ரலி)

📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம் -1547

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴

🌟🌟🌟🌟17-2-17🌟🌟🌟🌟

No comments:

Post a Comment