👋🏿 *ஒரே பளார்.!*
*அதில்*
*மூன்று பதில்கள்.!* 🔦
மார்க்க அறிஞர் ஒருவர்
கூட்டத்தில்„
விளக்கமளித்துக்
கொண்டிருந்தார்.!
இளைஞன் ஒருவனுக்கு
*மார்க்கத்தில் மூன்று சந்தேகம்*
மார்க்க அறிஞரை நெருங்கி
*"என் மூன்று ஐயங்களுக்கு, விடை காண வேண்டும்"*
என்றான்.!
*கேளுங்கள், இறையருளால், நான் அறிந்திருந்தால், கூறுகிறேன்*
என்றார்.!
கேட்டான் இளைஞன்
ஒரே மூச்சில்
மூன்று கேள்விகளை„„
*"1) இறைவன்*
*இருக்கின்றானா.?*
*இருந்தால், பார்க்க*
*இயலுமா.?*
*2) விதி (தக்தீர்)*
*உண்மையா.?*
*3) ஷைத்தான், நெருப்பால் படைக்கப்பட்டான் எனில்„*
மறுமை நாளில்
*நரக நெருப்பு, ஷைத்தானை*
*எப்படிச் சுடும்.?"*
(எவ்வாறு தண்டிக்கப்படுவான்.?)
இளைஞனின் ஐயங்களைக் கேட்டறிந்த
மார்க்க அறிஞர்
இளைஞனை நெருங்கி
*ஓங்கிப் பளார் அறை விட்டார்*
அறை விட்டதில்,
பொறி கலங்கிப் போனான் இளைஞன்,,
*என்ன ஜீ,,! கேள்வி கேட்டால்„*
*"அறை"தான்*
*உங்கள்*
*பதிலா.?*
என்றான் இளைஞன்.!
*"ஆம் இளைஞனே.!*
*உம் கேள்விக்கு இதுதான் பதில்*
என்ற அறிஞரின்
பேச்சால்
குழப்பமானான் இளைஞன்.!
அவன் நிலை கண்டு,
ஆறுதலாய் நெருங்கிய அறிஞர்
*இளைஞனே.!*
*இப்போது என்ன உணர்கிறாய்.?*
என்றார்.!
*மிக மிக வலிக்கிறது* என்றான்
இளைஞன்.!
*நிஜமாகவா.?*
என்றார்.!
*ஆம் ஜி..! நிஜமாகவே வலிக்கிறது*
என்றான் இளைஞன்.!
*வலி நிஜம் என்றால்„„*
*அந்த வலியை எனக்குக் காட்டு, பார்க்கலாம்*
என்றார் அறிஞர்.!
விழித்தான் இளைஞன்.!
*உன் முதல் கேள்விக்கு, இதுதான் பதில்.!*
*இறைவனைப் பார்க்க*
*இயலாது.!*
*பரிபூரணமாக உணரத்தான் முடியும்*
என்றார் அறிஞர்.!
*என்னிடம் அறை வாங்குவாய் என்று*
*நீ* *எண்ணியதுண்டா.?*
என்றார் அறிஞர்.!
*இல்லை* என்றான் இளைஞன்.!
*நீ சற்றும் எதிர்பார்க்காத என் அறைதான், உன் விதி (தக்தீர்)*
என்றார் அறிஞர்.!
வியந்தான் இளைஞன்.!
*உன்னை அறைந்த என் கை, சதையால் ஆனது.!*
*அறை வாங்கிய உம் கன்னமும், சதையால் ஆனது.!*
*சதை„ சதையை அடிக்கும்போது„*
*ஏன்*
*வலிக்கிறது.?*
*அதுபோல்தான் இறைவன்,*
*தான் நாடியபடி,*
*நெருப்பை„ நெருப்பால் பொசுக்குவான்*
என்றார்
அறிஞர்.!
விக்கித்துப் போனான் இளைஞன்.!
பதிவு நாள்: *19-02-2017*

No comments:
Post a Comment