*🌾இஸ்லாம், இறைநம்பிக்கை குறித்த அடிப்படைத் தகவல்கள் தொடர் - 5*
♻இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு
அல்லாஹ் ஒருவனென்றும், அவனது இறைத்தன்மையிலும், படைத்து பரிபாலிப்பதிலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நம்புதல், அல்லாஹ் ஒரே ஒருவனே, அவனது அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் எவருக்கும் பங்கு இல்லை.
🎓அல்லாஹ்வே அனைத்தையும் சிருஷ்டித்தவன், அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் சிருஷ்டிக்கப் பட்டவையே, சிருஷ்டிப்பில் அவனுக்கு பங்காளியாக எவரும் இல்லை, அல்லாஹ் இல்லாமையில் இருந்து உருவாக்கும் ஆற்றல் மிக்கவன், அவனது படைப்பினங்களுக்கு உபகாரம் செய்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன், அவர்களது அனைத்து செயற்பாடுகளையும் அறிபவன், அவர்களின் செயலுக்கேற்ப கூலி வழங்குபவன் என நம்புவது,வணங்கி வழிப் பட தகுதி வாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என நம்புதல், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது,மலக்கு (வானவர்) களும், நபிமார்களும் அல்லாஹ்வுக்கு பணிபுரியவும், வழிப் படவுமே படைக்கப் பட்டுள்ளனர்.
👨👩👦👦அவன் மனித சமூகத்துக்கான வாழ்வு நெறியை அவனது தூதர்களினூடாகவும், வேதங்களின் மூலமும் அறிவித்துக் கொடுத்தான், அல்லாஹ் என்றும் இருப்பவன், அவனுக்கு பெற்றோர் கிடையாது, குழந்தைகள் கிடையாது, அந்தம், ஆதி இல்லாதவன், யாரிடமும் எந்த தேவையும் அற்றவன்.
✅முதலுக்கு முதலானவன், முடிவுக்கு முடிவானவன், அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அவனுக்கு இணைக் கற்பித்தலைத் தவிர அனைத்து குற்றங்களையும் மன்னிப்பவன், அவனுக்கு அழகிய திருநாமங்களும், பூரண வருணனைகளும் உள்ளன, அதில் அவனுக்கு நிகராக யாருமில்லை,
🕋அவன் எம்மை எந்தவொன்றுமின்றி அனைத்து வளங்களோடும் அழகிய உருவில் சிருஷ்டித்து அநேக அருள்களைப் பாலித்திருக்கிறான், எவரேனும் தொழுகைகள், பிற வணக்கங்கள், வணக்க சாஷ்டாங்கங்கள் போன்றவற்றை அல்லாஹ்வுக்கன்றி வேறு எவருக்கேனும் (ஒரு மலக்காகவோ, தெரிவு செய்யப் பட்ட நபியாகவோ இருந்தாலும் சரியே) நிறைவேற்றுவார்களாயின், தான் ஒரு முஸ்லிமென உரிமைக் கோரிக்கொண்ட போதும் அவன் ஒரு முஸ்லிமே அல்ல.
⭕“மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்” என (நபியே!) நீர் கூறுவீராக” (அல் குர்ஆன் 6:162)(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
❤அல்லாஹ் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
*(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)*
பதிவு நாள்: *01-03-2017*
No comments:
Post a Comment