*🕋 மார்க்க கேள்வி எண் 386:*
🎯 *அ) செழிப்பான தோட்டங்களை அல்லாஹ் எதைக் கொண்டு முளைக்கச் செய்கிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:51-60"*
✅பதில்:
மழையைக் கொண்டு
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:60*
📕அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 27:60)
🎯ஆ) *பெருமானார் அவர்கள் எவரை தம்மோடு அணைத்து கொண்டு இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக் கொடுப்பாயாக என்று சொன்னார்கள்❓*
✅பதில்:
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை
ஆதாரம்:- *புகாரி: 75,3756,7270*
📋75. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📝3756. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னை நபி(ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, 'இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'ஹிக்மத்' என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி.
📒7270. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, 'இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக' என்றுசொன்னார்கள்.4
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
9. ஹக்கிம் - தென்காசி 2
10. ஷாஜகான் - சென்னை 1
11. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
2. அப்துல் பாசித் - சவுதி 2
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *23-02-2017*
No comments:
Post a Comment