Wednesday, 22 February 2017

*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 26 🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 26 🌍🌍*

*(இறுதி தொடர்)*

*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*

*10.பெரு நெருப்பு*

🔘எமன் நாட்டில் மிகப் பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும், அது வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஹுதைஃபா* *(ரலி), *
*நூல்: முஸ்லிம் 5162*

🔘யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.

*🔘இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல இறைவன் துணை செய்வானாக!*

*💐அல்ஹம்துலில்லாஹ் "கியாமத் நாளின் அடையாளங்கள்"தொடர் நிறைவு பெற்றது*

பதிவு நாள்: *22-02-2017*


No comments:

Post a Comment