*🕋 மார்க்க கேள்வி எண்385:*
🎯 *அ) ஸாலிஹ் (அலை) அவர்கள் தம் சமூகத்தாரிடம் இறைவனிடம் தவ்பா கோர சொன்னதற்கு அவர்கள் என்ன கூறினார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:41-50"*
✅பதில்:
உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்:27:47*
📖அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
(அல்குர்ஆன் : 27:47)
🎯ஆ) *எவன் காபாவை இடிப்பான் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன்.
ஆதாரம்:- *ஸஹீஹ் முஸ்லிம் : 5576,5577,5578*
*ஸஹீஹ் புகாரி: 1591,1596*
📚5576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📒5577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📝5578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபாவை இடித்து)ப் பாழாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📋1591. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📕1596. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
4. ஷாஜகான் - சென்னை 1
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. ஹக்கிம் - தென்காசி 2
10. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
11. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. அப்துல் பாசித் - சவுதி 2
4. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 1
6. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 1
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
9. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
10. நூகு அமீர் -கீழக்கரை 2
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1
🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *22-02-2017*
No comments:
Post a Comment