*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
369:
🎯 *அ) நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் தங்களை பாதுகாக்கக் கோரி இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தித்தார்கள், அதற்கு அல்லாஹ் அவருக்கு என்ன செய்ததாக கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:111-120"*
✅பதில்:
நீ எனக்கும், அவர்களுக்குமிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
ஆதாரம்: *அல்குர்ஆன்:26:118&119*
📖ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
(அல்குர்ஆன் : 26:118)
📕ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
(அல்குர்ஆன் : 26:119)
🎯 ஆ) *எவருடைய சாபத்திற்கும், இறைவனுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
அநீதி இழைக்கப்பட்டவரின்
ஆதாரம்:-
*புகாரி: 1496,2448*
*முஸ்லிம்: 2613*
📙1496. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகிற ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களக்க அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.'
முஆத் இப்னு ஜபல(ரலி) யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📚2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📋2613. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள். (அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் முன்கலபி, வல்ஹவ்ரி பஅதல் கவ்னி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில்அஹ்லி வல்மால்" என்று கூறுவார்கள்.)
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
💎1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
💎2. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
💎3. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
💎4. பீர் முஹம்மது - திருநெல்வேலி 1
💎5. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி 2
💎6. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
💎7. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
💎8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
💎9. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
💎10. அமீன் - திருநெல்வேலி 2
💎11. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
💎12. ஹக்கிம் - தென்காசி 2
💎13. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
💎14. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
💎15. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 1
💎16. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
☘1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
☘2. நூகு அமீர் -கீழக்கரை 2
☘3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 1
☘4. ஹுசைன் - நாகர்கோவில் 2
☘5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
☘6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
☘7. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
☘8. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
☘9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
☘10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
☘11. முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் 1
🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈
💰1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *05-02-2017*
No comments:
Post a Comment