*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர்- 25 🌍🌍*
*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*
*🚫மூன்று பூகம்பங்கள்*
*7மதீனாவின் கிழக்கே ஒரு பூகம்பம்*
*8.மதீனாவின் மேற்கே ஒரு பூகம்பம்*
*9.அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்*
🔘யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம்,அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்:* *ஹுதைபா (ரலி),*
*நூல்:* *முஸ்லிம் 5162*
🔘உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்தப் பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.
🔘இம்மூன்று பூகம்பங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: *21-02-2017*

No comments:
Post a Comment