Tuesday, 14 February 2017

*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 18 🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 18 🌍🌍*

*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*

*2.5 தஜ்ஜால்*

*🚫தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை*

🔘இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான்.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.*
*அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),*
*நூல்: முஸ்லிம் 5228*

*🚫தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்*

🔘இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*மதீனா' நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),*
*நூல்: புகாரி 7125*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம்' பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),*
*நூல்: முஸ்லிம் 2450*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத்' எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),*
*நூல்: அஹ்மத் 23327*

🔘மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது.


*📚ஹதீஸ்👇🏻👇🏻
*'அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனா வின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது'' என்பது நபிமொழி.*
*நூல்: அஹ்மத் 22571*

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 14-02-2017.


No comments:

Post a Comment