*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 16 🌍🌍*
*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*
*2-3. தஜ்ஜால்*
*🚫இஸ்லாத்தை எதிர்ப்பான்*
🔘முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளி யேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான்.
🔘அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),*
*நூல்: முஸ்லிம் 5237.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர்' என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),*
*நூல்: முஸ்லிம் 5223*
🔘அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது.
*🚫அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.*
*நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408*
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 12-02-2017.

No comments:
Post a Comment