*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 13 🌍🌍*
*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*
*2.தஜ்ஜால்*
🔘பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனின் வருகை முக்கியமானதாகும்.
🔘தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.
🔘முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீய சக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.
🔘பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த மாடர்ன்' மவ்லவிகள், 'பிரிட்டன் தான் தஜ்ஜால்'' என்றனர்.
🔘இஸ்ரேலின் பிரதமர் *மோஷே தயானையும்* சிலர் தஜ்ஜால் என்றனர்.
*🔘ஜார்ஜ் புஷ்* என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியைச் சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது *ஜார்ஜ் புஷ்'* தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.
🔘தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம். தஜ்ஜாலைப் பற்றி எல்லா அறிவிப்புகளையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்பு களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் தமது அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.
🔘மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது *தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான்.* *கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன்' கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.*
🔘இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.
*🚫தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அபூ உபைதா (ரலி),*
*நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)*
*நூல்: முஸ்லிம் 5239*
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 09-02-2017.

No comments:
Post a Comment