*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 11🌍
*🚫இது வரை நிகழாத அடையாளங்கள்*
🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்த அடையாளங்களில் இன்று வரை நிறைவேறிய அடையாளங்களை நாம் கண்டோம்.
🔘அவர்கள் அறிவித்து இன்னும் நிறைவேறாத அடையாளங்களும் உள்ளன.இன்ஷா அல்லாஹ் அவற்றை காண்போம்
*🎯யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.*
*நூல்: புகாரி 2926*
*🎯கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.*
*நூல் : புகாரி 5179*
*🎯யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.*
*நூல் : புகாரி 7119*
*🎯கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.*
*நூல் : புகாரி 3517, 7117*
*🎯அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.*
*நூல் : முஸ்லிம் 5183*
*🎯எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.*
*நூல் : முஸ்லிம் 5191*
*🎯செல்வம் பெருகும்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.*
*நூல் : புகாரி 1036, 1412, 7121*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார்.'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.*
*நூல் : புகாரி 1424*
*🎯மாபெரும் யுத்தம்*
*இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.*
*நூல் : புகாரி 3609, 7121, 6936*
*🎯பைத்துல் முகத்தஸ் வெற்றி*
🔘யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
*1.எனது மரணம்*
*2.பைத்துல் முகத்தஸ் வெற்றி*
*3.கொத்து கொத்தாக மரணம்*
*4.நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு*
*5.அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்*
*6.📚மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.*
*நூல் : புகாரி 3176*
🔘முதல் இரண்டு நிகழ்வுகள் நடந்து விட்டன.
🔘மூன்றாவதாகக் கூறப்பட்டது ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் பாலஸ்தீனில் நடத்தப்படும் கொடுமைகளைக் குறிக்கிறதா? அல்லது இனி மேல் நடக்கவுள்ளதா? என்பது தெரியவில்லை. மற்றவை இன்னும் நடக்கவில்லை.
*🎯மதீனா தூய்மையடைதல்*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.*
*நூல் : முஸ்லிம் 2451*
*🎯அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.*
*நூல் : முஸ்லிம் 3546*
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்:07-02-2017

No comments:
Post a Comment