🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎
🍓 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🍓
🌙நபிமார்கள் வரலாறு🌟
*ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களின் வம்சத் தொடர் :B
நூஹ் நபியவர்களின் அழைப்புப் பணி
🌴மக்களின் நிராகரிப்பும்,சிலை வணக்கமமும் பரவலாகிய போது,அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக ஹஜ்ரத் நூஹ் (அலை) அவர்களை நபியாக அல்லாஹ் அனுப்பினான். அவர்கள், மக்களிடம் சென்று "இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்." என அறிவுரை கூறி அழைப்பு விடுத்தார்கள்.
🌿இதைக் கேட்ட சமுதாயத் தலைவர்கள், "நாங்கள் உம்மை இறைத் தூதராக ஏற்க மாட்டோம். ஏனெனில், நீரும் எங்களைப் போன்ற மனிதர்தானே? மேலும் உம்மை இழிவான, கீழ்த்தரமான மக்களே பின்பற்றுகிறார்கள்" என பதில் கூறினர்.
☘நூஹ் அலை அவர்கள் மக்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் நெருக்கமும் நற்பாக்கியமும் செல்வத்தால் ஏற்படுவதில்லை. மாறாக அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் மனத் தூய்மையும் எண்ணத்தைக் கொண்டே அமைவதாகும்.
செல்வத்தை ஆதரவு வைத்து நான் உங்களை அழைக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் ஆணைப்படி அவன் திருப் பொருத்தத்திற்காகவே அழைக்கின்றேன்.அவனே எனது உழைப்பிற்கு நற்கூலி வழங்குபவன்" என பதிலளித்தார்கள்.
🍁ஆக இரவு, பகலாக தனிப்பட்ட முறையிலும், பொது இடங்களிலும் நீண்ட நெடுங்காலமாக சமுதாயத்தினரை இணைவைத்தல், நிராகரிப்பு, மற்றும் இறை மறுப்பு ஆகியவற்றிலிருந்து எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.
🌾ஆனால் மக்கள் அவர்கள் அழைப்புப் பணி செய்யும் பொழுது தங்களுடைய விரல்களை காதுக்குள் வைத்துக் கொள்வர்.ஆடைகளால் மூடிக் கொள்வார்கள்.மிகவும் பிடிவாதக் காரர்களாகவும்,பெருமையடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
🍃"அல்லாஹ்வின் வேதனையை இறக்கிக் காட்டு பார்ப்போம்"என்று நூஹ் நபியிடம் அம்மக்கள் சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
🌟 இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....
📝 முஹம்மது ஃபாயஸ்🏅
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 கியாமத் நாளை நோக்கி 🌴
பதிவு நாள்: 27 / 1 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment