Monday, 15 May 2017

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் - 4.

🎓தாவூத் (அலை) அவர்களின் வாழ்க்கை  வரலாறு தொடர் - 4.

💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்அய்த்' எனும் சொல்லுக்கு 'வணக்க வழிபாட்டில் செயலாற்றல்' என்றும், 'அல் அப்ஸார்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை' என்றும் பொருள்.

மூஸா நபிக்கு பிறகு இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்

2:246 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம் "நாங்கள் அல்லாஹ்வின்பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார் அதற்கவர்கள் "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக்காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247 அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள் அதற்கவர், "நிச்சயமாகஅல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்குஅதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்.

💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 15-05-2017

No comments:

Post a Comment