Friday, 14 April 2017

*♻நபி (ஸல்) அவர்களின் மருத்துவம் - 2*♻

*•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••*

*♻நபி (ஸல்) அவர்களின் மருத்துவம்♻*

*💢💢கண்பார்வை தெளிவுக்கும் இமை நன்கு வளரவதற்கும் சுர்மா மருந்தாகும்:💢💢*

*عَنْ ابْنِ عَبَّاسٍ, أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اكْتَحِلُوا بِالْإِثْمِدِ, فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ. (ترمذى, 1757, ابوداود-3878)*

*இப்னு அப்பாஸ் ரளி அறிவிக்கிறார்கள்: 'அஞ்சனக் (சுர்மா) கல்லால் அஞ்சனமிட்டு(சுர்மாயிட்டு)க்கொள்ளுங்கள். அது கண்பார்வையைத் தெளிவாக்கும். இமையை முளைக்க வைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (திர்மதி-1757, அபூதாவூது-3878)*

கண் வலி, கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் நோய்களுக்கு அஞ்சனம் அல்லது சுர்மா (Antimony) சிறந்த நிவாரணிகும். அஞ்சனக் கல்லை  உரசி, அதிலிருந்து வரும் தூளைக் கண்ணின் கீழ்பாகத்தில் தேய்த்துக்கொள்வது கண் நோய்க்கு நல்லது.

*💢💢விஷத்திற்கும் சூனியத்திற்கும் அஜ்வா பேரிச்சம்பழம் மருந்தாகும்:💢💢*

*عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً, لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْيَوْمِ سُمٌّ وَلَا سِحْرٌ (بخارى-5445)*

*ஸஃது பின் அபீவக்காஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: 'தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது. எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (புகாரி-5445)*

மினரல்கள்: பேரிச்சம்பழத்தில் மினரல், கொழுப்பு சத்து, நார்ச்சத்து, புரச்சத்து மற்றும் கலோரி உள்ளது. 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் 648 மி.கிராம், பொட்டாசியம் 59 மி.கிராம், கால்சியம் மற்றும் இரும்பு சத்து 1.3 மி.கிராம் உள்ளன. அதிக இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பேரிச்சம்பழம் மிகவும் நல்லது. சிலவகை கடும் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பேரிச்சம்பழம் உதவுகின்றன.
கொழுப்பு சத்து: பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் மிகவும் குறைவாக, 0.2மூ முதல் 0.5மூ வரையே கொழுப்பு சத்து உள்ளது.
நார்ச்சத்து: பேரிச்சம்பழத்தில் பெக்டின் மற்றும் செல்லுலோஸ் என்ற நார்ச்சத்துகள் உள்ளன. 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் 6.5 கிராம் முதல் 11.5 கிராம் வரையிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பிற பழங்களைவ விட அதிகமாக, பேரிச்சம்பழங்களின்தான் 3.5% முதல் 5.5% வரையிலான அளவு பெக்டின் நிறைந்துள்ளது. பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

புரச்சத்து: 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதயில் 2.5 கிராம் புரச்சத்து உள்ளது. 7 பேரிச்சம்பழங்கள் சாப்பிட்டால், அதனால் 1 கிராம் புரச்சத்து கிடைக்கிறது.

கலோரி: ஒரு கிராம் பேரிச்சம்பழத்தில், மூன்று கிலோ கலோரிக்கு சற்று குறைவாக உள்ளது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில், 280 கிலோ கலோரி உள்ளது. 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தினமும் 38 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

*💢💢மன உளைச்சலுக்கு (தல்பீனா) பால் பாயாசம்:💢💢*

*عَنْ عُرْوَةَ, عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ وَكَانَتْ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ, وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ (بخارى-5689)*

*உர்வா பின் அஜ்ஜுபைர் (ரளி) அறிவிக்கிறார்கள்: '(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரளி) அவர்கள் நோயளிக்கும், இறந்துபோனவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயாசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும்¢ கவலைகளில் சிலவற்றை போக்கும்' என்று கூறக்கேட்டுள்ளேன்' என்பார்கள். (புகாரி-5689)*

'அத்தல்பீனா' என்பது மாவு, பால் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் பாயசம் அல்லது கஞ்சியாகும். பாலுக்குப் பதிலாகத் தேன் சேர்க்கப்படுவதுமுண்டு. இதைக் கோதுமைக் குறுணையால் தயாரிப்பதே அக்கால வழக்கமாகும். இது ஒரு மிருதுவான உணவாதலால் நோயாளிக்கு ஏற்றதாகும். சூடாக இதை அருந்தினால் உடல் வெப்பம் சீரடைய இது உதவும். நோயாளியானாலும், துக்கத்தில் இருப்பவரானாலும் அவர்களுக்கு உணவு குறைந்துவிடுவதால் இரப்பை உள்ளிட்ட உறுப்புகளில் காய்வு நிலை காணப்படும். இந்தக் கஞ்சி ஈரத்தை ஏற்படுத்தி வலுவூட்டும். அத்துடன் நோயாளியின் இரைப்பையில் சேர்ந்துவிடுகிற பித்த நீர், கபம் ஆகியவற்றை இது அழித்துவிடும். (ஃபத்ஹுல் பாரி).

பதிவு நாள்: 14-04-2017

No comments:

Post a Comment