📖மார்க்க தீர்ப்பு வழங்குவதில் பேணுதல்
************************
سئل الشعبي عن مسألة، فقال: لا أدري، قيل له: ألا تستحي من قول "لا أدري" وأنت فقيه العراق؟ فقال: لكن الملائكة لم تستح حين قالوا: "سبحانك لا علم لنا إلا ما علمتنا"..
🌹இமாம் ஷுஃபி (ரஹ்) அவர்களிடம் ஒரு மஸ்அலாவை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் கூறினார்கள்.
❌இராக்கின் மிகச்சிறந்த பகீஹாக இருக்கும் நீங்கள் தெரியாது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என கேட்கப்பட்டபோது -
سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
📃“(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)
📜என்று சொல்ல மலக்குகளே வெட்கப்படவில்லை.
நான் ஏன் வெட்கப்படவேண்டும்? என்று கேட்டார்களாம்.!!
♻வணக்கமானாலும் வாழ்க்கையானாலும் அதில் பேனுதலை கடைபிடித்து வாழ வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள்.
💐அனைத்தும் எமக்குத் தெரியும் எனும் எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவே ஒரு மனிதனுக்கு கர்வம், பெருமை போன்றவைகளெல்லாம் தலையில் ஏறி நின்று விடுவதற்க்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன.
📕தூதரின் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் சஹாபா கண்மணிகள்
الله ورسوله اعلم
'அல்லாஹ்வும் அவனின் ரசூலுமே மிக அறிந்தவர்கள்' என்று பதில் அளிப்பார்கள்.
🕋எனவே நமக்கு மார்க்க விடயத்தில் பதில் தெரிந்தாலும் அதை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பதில்களை சொல்லிவிட்டு இறுதியில் அல்லாஹ்வும், ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறுவது மார்க்கப் பேணுதலை அது காட்டும்.
🗺இப்பேணுதல் மார்க்க விடயத்தில் எம்மவர்களுக்கும் வருவதற்க்கான முயற்சியை மேற்கொள்வது ஆரோக்கியமான செயலாக இருக்கும்.
_அப்துல் காதிர் மன்பஈ_
பதிவு நாள்: *19-03-2017*

No comments:
Post a Comment