🗣"இறைவனிடம் கையேந்துவோம்"
👉தூங்கும் முன் ஓத வேண்டிய வசனங்கள்.❗✅
👉தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: 📚புகாரி 3275.📚
👉ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:
اَللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِيَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ()
👉அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி[F]ஸ்ஸமாவா(த்)தி வமா பி[F]ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப[F]வு இந்தஹு இல்லா பி(B] இத்னிஹி, யஃலமு மாபை(B]ன ஐதீஹிம் வமா ஃகல்ப[F]ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B]ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B]மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்[F]ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.
இதன் பொருள்:
👉அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்;மகத்துவமிக்கவன்.✅
📖(திருக்குர்ஆன் 2:255)📖
👉 பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
ஆதாரம்: 📚புகாரி 4008, 5010, 5040, 5051📚
👉இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம். அந்த வசனங்கள் வருமாறு:
آمَنَ الرَّسُوْلُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُوْنَ كُلٌّ آمَنَ بِااللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوْا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ(285)لاَ يُكَلِّفُ اللهُنَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِالْكَافِرِيْنَ
👉ஆமனர் ரஸுலு பி(B]மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(B]ஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பி(B]ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(B]ஹி, வருஸுலிஹி,லாநுப[F]ர்ரி(க்)கு பை(B]ன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுப்[F]ரான(க்)க ரப்ப(B]னா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிபு[F]ல்லாஹு நப்[F]ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(B]த். வஅலைஹா மக்தஸப(B]த். ரப்ப(B]னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(B]னா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(B]லினா, ரப்ப(B]னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(B]ஹி, வஃபு[F] அன்னா வஃக்பி[F]ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப[F]ன்ஸுர்னா அலல் கவ்மில் காபி[F]ரீன்.
இதன் பொருள்:
👉இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்;கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. 'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).
📖(திருக்குர்ஆன் 2:285,286)📖
👉இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள் ‼
பதிவு நாள்:08-03-2017

No comments:
Post a Comment