🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச்செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
📚(அல்குர்ஆன் 2:261)
🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருடகளும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
என அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
பதிவு நாள்: *11-03-2017*
No comments:
Post a Comment