Friday, 17 March 2017

♻பெண்களின் பாதுகாப்பு கவசமாக கருதப்படுவது ஹிஜப் ( புர்கா)


📌📌📌📌📌📌📌📌

               *HIJAB*

📌📌📌📌📌📌📌📌



 ♻பெண்களின் பாதுகாப்பு கவசமாக கருதப்படுவது ஹிஜப் ( புர்கா)

♻அதை இன்று நாவநாகரிக மாற்றத்தில் குழந்தைகள் அணியும் கவுன் போல ஆக்கிவிட்டார்கள்.

♻முன்பெல்லாம் தங்கள் கண்களை தவிர மற்ற அனைத்தும் மூடியபடி புர்கா அணிந்தார்கள். ஆனால் இன்றோ கண்களை மட்டுமே மறைத்து மற்ற அனைத்தும் வெளி தெரியும் படி புர்கா நாகரிகமானதாக மாறிவிட்டது.

♻ஆண்கள் கூட்டமாக உள்ள இடங்களின் பெண்கள் செல்லவே கூச்சப்படும் காலம் போய் இன்று பெண்கள் கூட்டத்தை பார்த்து ஆண்கள் கோஸா போடும் நிலை உள்ளது.

♻சரிதானே காலம் மாறுகின்ற போது நாமும் காலத்திற்க்கு தகுந்தாற் போல் மாறித்தானே ஆகவேண்டும். ஆனால் அதிநவின மாற்றம் அதிகமாகி விட்டது இந்த புர்கா விஷயத்தில்.

♻நம் பெண் பிள்ளைகளுக்கு என்று தனி பள்ளி உள்ளது ஆனால் பள்ளியின் பொருளாதாரம் சரிவடைந்த காரணத்தால் பள்ளி பேருந்து கூட வாங்க முடியாத சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம்.
(பாவம் ஏழைப்பட்ட நிர்வாகம் அல்லவா )

♻தன் கண்ணியம் காக்க பயன்படும் ஒரு பொருளை இன்று கண்கள் பார்க்கும் பொருளாக மாற்றிவிட்டது நாகரிகம்.

♻திருத்துவதற்கு நிறைய இருக்கும் போது பழைய கதைகளை தொகுப்பாக்கி என்ன செய்யப்போகிறோம். அன்று வாழ்ந்தவர்களை பற்றி பேசாமல் இன்று வாழக்கூடிய மக்களுக்கு வழிமுறைகளை மாற்றி தர முயற்சிப்போம்.

♻திசைமாறி போகும் பலவற்றை சரியான திசையை நோகி பயணம் செய்ய கற்றுக்கொடுங்கள்.

♻இன்னும் மாற்றங்களை நாம் பார்க்க நேரிடும் அதை தடுக்க முறையாய் ஏதாவது செய்யவேண்டும்.
 
♻பர்தா விழிப்புணர்வு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் நம் சமுதாயத்தில் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் விட்டால் நம் சிறுபான்மை மக்கள் பெருவாரியாக பாதிக்கப்படக்கூடும்.

♻மாற்றப் முயற்சிப்போம் மாறவில்லையா எப்படியோ போகட்டும் என்று தூக்கி எரிவோம்.

📌📌📌📌📌📌📌📌

மலுக்ஸா இம்ரான்

📌📌📌📌📌📌📌📌

பதிவு நாள்: *18-03-2017*

No comments:

Post a Comment