🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْم
*மோசமான திருடன் யார் தெரியுமா?*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டிருப்பான்.
அது உதயமாகும் போது அல்லது மறையும் போது
அவசர அவசரமாகக்
'கோழி கொத்துவ தைப் போல' நான்கு கொத்து கொத்துவான். (தொழுவான்.)
அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூர்வான்.
இதுதான் நயவஞ்சகனின் தொழுகைக்கான உதாரணம்.'
அனஸ் (ரளி)
ஸஹீஹ் முஸ்லிம் - எண் : 1097
தொழுகை உயிரோட்டமாக அமைய,
நிதானமாக தொழவேண்டும்.
அவசர அவசரமாக தொழக்
கூடாது.
ருகூவு,
சுஜூதை
முழுமையாக நிறைவேற்றாமல் அவசரமாக தொழுபவனை
'மிக மோசமான தொழுகைத் திருடன்'
என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்
ளார்கள்.
உதாரணத்திற்கு ஒருவன் மூன்று நிமிட ருகூவு, சுஜூதை
ஒரு நிமிடமாகக் குறைத்தால்,
இரண்டு நிமிடத்தை அவன் திருடுவதாகத்தானே அர்த்தம்.
இது எவ்வளவு மோசமான திருட்டு?
இதை விட மோச மான திருட்டு வேறு எது இருக்க முடியும்?
மனிதர் எவராவது ஒரு வீட்டில் திருடினால்,
அது சாதாரணத் திருட்டு.
இறைவனின் வீட்டில் திருடினால்,
அதுவும் தொழுகையில் திருடினால்,
அது எவ்வளவு பெரிய திருட்டு?
ஒரு சாதாரண மனிதரோடு உரையாடும்போதே
மிகுந்த
மரியாதையாகவும்
நிதானமாகவும்
அமைதியாகவும்
நாம் உரையாடுகிறோம்.
எல்லாம் வல்ல இறைவனோடு உரையாடுவது என்றால்,
எவ்வளவு
கண்ணியமாக,
நிதானமாக,
அமைதியாக
நாம் உரையாட வேண்டும்.
நமது தொழுகை இவ்வாறு உள்ளதா?
எவ்வாறு உள்ளது?
சற்று சிந்திக்கவும்.

No comments:
Post a Comment