மற்றநேரம் உயிராய் இருப்பவர்கள் கூட
ஜக்காத் என்றதுமே ஓடிவிடுகிறார்கள்!
மறுமையில் நினைப்பதை விட
அல்லாஹ்வே கொடுத்திருக்கலாமே என்று
இப்பவே யோசியுங்கள் சகோதரிகளே!
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
நல்ல பதிவு இது வாசியுங்கள்
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
யாரிடமேனும் 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம் (இரண்டரை சதவிகிதம்) - தங்கத்தை அல்லது அதற்கு இணையான பணத்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஜகாத்தை வழங்க வேண்டும்.
2.5% சதவிகிதம் ஜகாத்..!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை (அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஜகாத்தாக எடுப்பார்கள். {அறிவிப்பாளர்கள்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா; இப்னு மாஜா 1791}
ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4.25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும். (நன்றி-அல்பாக்கவி டாட் காம்)
யாரிடமேனும் 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால், அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
உதாரணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம் (இரண்டரை சதவிகிதம்) - தங்கத்தை அல்லது அதற்கு இணையான பணத்தை ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.
வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஜகாத்தை வழங்க வேண்டும்.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்..!
பதிவு நாள்: 25-03-2017
ஜஸாக்கல்லாஹ்கைரன்
No comments:
Post a Comment