*📖அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்? தொடர் -5*
👨👩👧👦இனைவைக்கும் பெண்களின் விடயத்தில் இமாம்களிடம் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது .காரணம் சில நபிதோழர்கள் யூத பெண்களையும் கிருஷ்த்துவ பெண்களையும் திருமணம் செய்திருந்தார்கள் .
இதன் விளக்கமாவது அப்போதிருந்த சில யூத கிருஸ்தவர்கள் சிலைவணக்கம் செயவில்லை மூஸா மற்றும் ஈசா (அலை) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தை அப்படியே பின்பற்றினார்கள் எனவே அவர்களை திருமணம் செய்வது குற்றமாகாது.ஆனால் இப்போதுள்ளவர்களை திருமணம் முடிப்பது ஆகாது .*அதுபோல் காபிரான கணவருக்கு முஸ்லிமான பெண் ஹலாலாக மாட்டாள் .
🌹6)நான்கு பெண்களை திருமணம் செய்து இருக்கும் போது ஐந்தாவதாக திருமணம் :
👤ஆண் 10 முதல் 15 திருமணம் வரை செய்துகொண்டனர். இதை குறைக்கவே இஸ்லாம் 4 திருமணம் என்ற வரையறையை கொண்டு வந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“கைலான் இப்னு சலமா அஸ்ஸகஃபி அவர்கள் இஸ்லாத்தில் இணையும்போது
❌அறியாமை காலத்தில் மணந்த மனைவிகள் இருந்தார்கள். மேலும் அந்த பெண்களும் அவரோடு இஸ்லாத்தில் இணைந்தனர்எனவே நபிஸல் அவர்கள் அந்த பெண்களில் 4 பேரை தேர்தெடுக்ககட்டளையிட்டார்கள். (ஆதாரம் : திர்மிதி :1128 , இப்னு மாஜா : 1953, அஹ்மத் : 13/2)
♻ஐந்தாவது திருமணம் செய்தால் அதற்கு இஸ்லாம் கூறும் தண்டணை:
நான்கு திருமணத்திற்கு மேல் ஒருவர் திருமணம் செய்வது இஸ்லாத்திற்கு மாற்றமான குற்றமாகும் . இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது ஐந்தாவது திருமணம் செய்தவனுக்கு கசையடி அடிக்க வேண்டும் . இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது ஐந்தாவது திருமணம் செய்தவனை கல்லால் அடிக்க வேண்டும். எனவே ஐந்தாவது திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. நான்குமனைவிகள் இருக்கும்பட்சத்தில் . (குறிப்பு : இப்பாடம் பிக்ஹ் சுன்னா கிதாபிலிருந்து தேவையான சட்டங்களை மட்டும் சுருக்கி கொடுக்கபட்டுள்ளது ).
(✅முடிவுற்றது - அல்ஹம்துலில்லாஹ்✅)
பதிவு நாள்: *10-03-2017*

No comments:
Post a Comment