Friday, 10 March 2017

⛵ ஆதம் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் :4


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

⛵ ஆதம் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் :4

களிமண்ணால் படைத்தான்:
இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம் (அலை) அவர்களை படைத்ததுப் பற்றி தெளிவாக கூறுகிறான்.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.

📒 திருக்குர்ஆன் 15:26

(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.

📕திருக்குர்ஆன் 15:28

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலை) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள்.

📚நூல்: முஸ்லீம் – அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி))

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர்.

📚நூல்: அஹ்மத் – அறிவிப்பாளர்: ஆபூமூஸா (ரலி))

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நாள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

📚 நூல்: முஸ்லிம் – அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி))

💰  ஆதமுடைய மக்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்களே, அப்பாவத்தை உணர்ந்து இறைவனிடத்தில் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்தால் இறைவன் தன் பாவங்களை மன்னித்து நல்வாழ்வினைத் தருவான். நாம் அனைவரும் ஷைத்தானுடைய வலையில் விழுந்துவிடாமல் இறைவன் கட்டளைப்படி, எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று ஈருலக நல்வாழ்வினைப் பெற்று, நல்லடியானாக மர்ணிப்பதற்கு கருணை உள்ள ரஹ்மான் கிருபை செய்வானாக ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!


🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: *11-03-2017*

☂☂☂☂☂☂☂☂☂☂☂

No comments:

Post a Comment