*📖அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்? தொடர் -3*
🌼“பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால் குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்” (ஆதாரம் : புகாரி 5099, முஸ்லிம் 1447)
🐞மேலும் பால்குடி உறவு என்பது தாய்மை உறவின் இடத்தில் இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. இக்காலத்தில் பால்குடி முறை இல்லை என்பதால் அதை பற்றி அலச அவசியம் இல்லை எனவே அதில் யாரெல்லாம் ஹராம் என்பதை சுருக்கமாக காண்போம் :
(1) பால்குடி தாய்
(2) .பால்குடி தாயின் மகள் அவனுக்கு முன் அல்லது பின் பிறந்திருந்தாலும் சரி .
(3) பால்குடி தாயின் சகோதரி
(4) பால்குடி தாயின் மகளின் மகள் (ஏனெனில் சகோதரியின் மகளாகிறாள் )
(5) பால்குடி தாயின் கணவரின் தாய் (ஏனெனில் பாட்டி ஆவாகிறாள் )
(6) பால்குடி தாயின் கணவரின் சகோதரி (ஏனெனில் மாமி ஆகிவிடுவாள் )
(7) பால்குடி தாயின் மகனின் மகள் (ஏனெனில் சகோதரனின் மகள் ஆகிவிடுவாள்)
(8) பால்குடி தாயின் கணவர் மகள் (பால்குடி தாய் அல்லாமல் வேறு மனைவிக்கு பிறந்த
பெண் )
(9) பால்குடி தாயின் கணவரின் வேறு மனைவிகள்
2.நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
1). மனைவியின் சகோதரி (இரு சகோதரிகளை சேர்த்து திருமணம் செய்வது )ஒரு ஆண் தான் மணமுடித்த பெண்ணின் சகோதரியை மணப்பது ஆகுமானதல்ல ஹராம் ஆகும் என்பதில் அனைத்து இமாம்களும் ஒருமித்த கருத்தே கொண்டுள்ளனர்.ஆனால் ஒரு ஆனின் மனைவி இறந்துவிட்டால் அல்லது தலாக் விடபட்டால் அவளின் சகோதரியை மணப்பது ஆகுமானது (ஹலால்) ஆகும் .
அல்லாஹ் கூறிய வசனம்
👥“ இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது
(சூரத்துன் நிசா :23)
🌳இதில் இரண்டு சட்டம் பிறக்கிறது . ஒரு ஆண் ஒரு பெண்ணையும் அவளின் சகோதரியையும் சேர்த்து மனமுடித்திருந்தால் ..? முதல் திருமணம் ஆகுமாது. முதல் மனைவியுடன் சேர்ந்தாலும் சரி சேராவிட்டாலும் சரி. இரண்டாம் திருமணம் செல்லாதது. எனவே இரு பெண்களில் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணை விட்டு பிரிந்து விட வேண்டும் . இருசகோதரிகளை ஒரு நிக்காஹ் மூலம் மணமுடிப்பது ஆகுமானது அல்ல,கேடு ஆகும் .ஒருவர் காபிராக இருந்தது முஸ்லிம் ஆகும் போது இருசகோதரிகளை திருமணம் செய்திருந்தால் ..?
🌈 அவனுக்கு இருவரில் ஒருவரை தேர்தெடுக்க உரிமை உண்டு . ஒரு பெண்ணை சேர்த்துகொண்டு ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணை தலாக் செய்ய வேண்டும் . இது பற்றி ஒரு ஹதீஸ் பிர்தவ்ஸ் தைலமி கூறுகிறார் : நபி (ஸல் ) அவர்களிடம் சென்று “யா ரசூலுல்லாஹ் , நான் முஸ்லிம் ஆகிவிட்டேன் மேலும் நான் இரு சகோதரிகள் (திருமணம் செய்துள்ளேன் ) . ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . “இருவரில் உமக்கு விருப்பமானவரை தேர்தெடுத்துகொள்” (ஆதாரம் :திர்மித் –1129, அபூதாவூத் 2243, இப்னு மாஜா -1951, அஹ்மத் -232/4 – அறிவிப்பு தரம் : பலகீனமானது )
🌿2) மனைவியின் சாச்சி (பெரியம்மா , சின்னம்மா ), மாமி ஒரு பெண்ணோடு சேர்த்து சாச்சி அல்லது மாமியை மணப்பது ) அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
🦋இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. ”
(ஆதாரம் : புஹாரி :5109 , முஸ்லிம் :1408)
🐤மற்றொரு அறிவிப்பு ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். (ஆதாரம் : புஹாரி 5108, நசாயீ 98/6)
✅அனைத்து இமாம்களின் ஒருமித்த கருத்து : ஒரு ஆண் ஒரு பெண்ணையும் அவளின் மாமி அல்லது சாச்சியை சேர்த்து மணப்பது ஆகாது அதுபோல் தந்தையின் சகோதரியின் (மாமி) தாய் , அது சொந்த உறவிலும் சரி பால்குடி முறையிலும் சரி. தாயின் சகோதரியின் (சாச்சி) தாய்யையும் சேர்த்து மணப்பதும் ஆகாது .
🌄3) பிறர் மனைவி (போரில் கைது செய்யபட்டவர்கள்) காபிரின் அடிமை (போரில் கைது செய்யபட்டவர்கள்) ,காபிரின் மனைவி முஸ்லிமானால் : அல்லாஹ் கூறுகிறான் : “இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. “ (சூரத்துன் நிசா :24)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *08-03-2017*

No comments:
Post a Comment