*மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவுரை!!! தொடர் -3*
*நல்ல நேரம் கெட்ட நேரம்*:
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺍﻟﻠَّﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻳُﺆْﺫِﻳﻨِﻲ ﺍﺑْﻦُ ﺁﺩَﻡَ ﻳَﺴُﺐُّ ﺍﻟﺪَّﻫْﺮَ ﻭَﺃَﻧَﺎ ﺍﻟﺪَّﻫْﺮُ ﺑِﻴَﺪِﻱ ﺍﻟْﺄَﻣْﺮُ ﺃُﻗَﻠِّﺐُ ﺍﻟﻠَّﻴْﻞَ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭَ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
⏱நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (7491).
📙அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்லநாள் கெட்டநாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.
ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.
பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அறியாமைக் கால பழக்கங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
ﻋﻦ ﺟَﺎﺑِﺮِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ … ﺃَﻟَﺎ ﻛُﻞُّ ﺷَﻲْﺀٍ ﻣِﻦْ ﺃَﻣْﺮِ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺗَﺤْﺖَ ﻗَﺪَﻣَﻲَّ ﻣَﻮْﺿُﻮﻉٌ ﻭَﺩِﻣَﺎﺀُ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).
நூல் : முஸ்-லிம் 2334)
*அறியாமைக் காலத்து பழக்கத்தை விரும்புவன்*:
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺃَﺑْﻐَﺾُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺛَﻠَﺎﺛَﺔٌ ﻣُﻠْﺤِﺪٌ ﻓِﻲ ﺍﻟْﺤَﺮَﻡِ ﻭَﻣُﺒْﺘَﻎٍ ﻓِﻲ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺳُﻨَّﺔَ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻭَﻣُﻄَّﻠِﺐُ ﺩَﻡِ ﺍﻣْﺮِﺉٍ ﺑِﻐَﻴْﺮِ ﺣَﻖٍّ ﻟِﻴُﻬَﺮِﻳﻖَ ﺩَﻣَﻪُ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
📚நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச்செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : புகாரி (6882)
*அறியாமைக் கால பழக்கத்தை விட்டவருக்கு மன்னிப்பு*:
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮﺩٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺟُﻞٌ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻧُﺆَﺍﺧَﺬُ ﺑِﻤَﺎ ﻋَﻤِﻠْﻨَﺎ ﻓِﻲ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻗَﺎﻝَ ﻣَﻦْ ﺃَﺣْﺴَﻦَ ﻓِﻲ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﻟَﻢْ ﻳُﺆَﺍﺧَﺬْ ﺑِﻤَﺎ ﻋَﻤِﻞَ ﻓِﻲ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ ﻭَﻣَﻦْ ﺃَﺳَﺎﺀَ ﻓِﻲ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡِ ﺃُﺧِﺬَ ﺑِﺎﻟْﺄَﻭَّﻝِ ﻭَﺍﻟْﺂﺧِﺮِ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
📋இப்னு மஸ்ஊத் (ர-லி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர்,
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : புகாரி (6921)
🌹முடிவுற்றது.
பதிவு நாள்: *22-03-2017*

No comments:
Post a Comment