Friday, 10 March 2017

⛵ ஆதம் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் :2


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

🍓 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🍓

🌙நபிமார்கள் வரலாறு🌟

⛵ ஆதம் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் :2

⌛அதற்கு இறைவன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

📙 திருக்குர்ஆன் 2:30

இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்

 📒 திருக்குர்ஆன் 2:31

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

📘 திருக்குர்ஆன் 2:32

“ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான்.

📕 திருக்குர்ஆன் 2:33

மலக்குகள் – மனிதன் – வேறுபாடு:
இறைவன் கட்டளையை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே செய்யக்கூடியவர்கள் மலக்குமார்கள், ஆனால் மனிதன் போதிய அறிவு பெற்றமையால் தவறிழைக்கக் கூடியவன். எனவே மலக்குகள் அவ்வாறு கேட்டார்கள். மனிதன் தவறிழைத்தாலும் அத்தவறுக்காக செய்யும் பாவமீட்சியை இறைவன் விரும்புகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

📝 உலாமாக்கள் குழுமம்🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: *11-03-2017*

☂☂☂☂☂☂☂☂☂☂☂

No comments:

Post a Comment