Friday, 31 March 2017

ஏப்ரல் 1 முட்டாள் தினம் அல்ல

ஏப்ரல் 1. முட்டாள் தினம் அல்ல

* அண்ணல் நபி ( ஸல் )அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்; நீர் உம் சகோதரரிடம் ஓரு விஷயத்தைச் சொல்லி அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்
அறிவிப்பாளர்: ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ (ரலி)
நூல்: அபூதாவூத்

ஏப்ரல் 1, "சர்வதேச முட்டாள்கள் தினம் ஆக அனுசரிக்கப்படுகிறது
இதனுடைய உண்மையான வரலாற்றுப்பிண்ணனி~
காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம். அதாவது கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட் டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன.
“கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.
இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?
 ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“முஃமின்களே! 
ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. (அல்குர்ஆன் 49:11)

“மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)

ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்! என்று குர்ஆன் கூறுகிறது
குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன் 7:20,20:120)

அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா)
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார்." (புகாரி 10)

பதிவு நாள்: 31-03-2017*

No comments:

Post a Comment