🌹☘🌹☘🌹☘🌹☘🌹☘
அல்லாமா அபுல்லைஸ் ஸமர்கந்தீ ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தமது நூலான தம்பீஹூல் ஃகாஃபிலீனில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்._
⛈வானத்தில் நடந்த முதல் பாவமும், பூமியில் நடந்த முதல் பாவமும் பொறாமை எனும் தீயகுணத்தால் தான்.
👹ஷைத்தான், ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தாச் செய்ய மறுத்ததும் பொறாமையால் தான்.
قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()
📖ஷைத்தான் இறைவனிடம் “ நான் அவரை விடஉயர்ந்தவன் என்னை நெருப்பால் படைத்தாய், (ஆதமை) அவரைக் களிமண்ணில் படைத்தாய்” என்றான். ( அல்குர்ஆன்: 7:12 )
❌ஆதம் அலைஹிஸ்ஸலாம் சந்ததிகளின் காபீல், ஹாபீலைக் கொன்றதும் பொறாமையால் தான்.
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ ()
🌗“இறுதியில் தன்னுடைய சகோதரனைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால்அவரை அவன் கொலை செய்தான். ஆதலால் அவன் பேரிழப்பிற்கு ஆளாகி விட்டான்."( அல்குர்ஆன்: 5:30 )
😳இந்தப் பொறாமை தான் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவனை மிகவும் கேவலமானவனாக மாற்றியது.
🌴சகோதரத்துவத்தோடும், வாஞ்சையோடும் வாழ வேண்டிய ஒருவனை கொலைக் குற்றவாளியாகவும் மாற்றியது.
🎓ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்”அருட்கொடைகள் நிரப்பமாக வழங்கப்பட்டிருப்பவரைப் பார்க்காதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்கள்.
👨👩👧👦இன்று பெரும்பாலானவர்கள் பிறரின் வளங்களையும், நிஃமத்துக்களையும் கண்டு பொறாமை கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மனநிம்மதி கிடைப்பதில்லை.
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: (انظروا إلى من هو أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم) متفق عليه .
♻அபூஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “செல்வம், உலக வசதி, வாய்ப்புக்கள்,செல்வாக்கு ஆகியவற்றில் உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள்; உலகாதாய நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்; ஏனெனில், அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கிற அருட்கொடைகள் உங்களுடைய பார்வையில் மதிப்பிழந்து போய் விடாமல் இருப்பதற்கு இந்த நடத்தையே அதிகப் பொருத்தமானதாகும்” என எம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *26-03-2017*
No comments:
Post a Comment