🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎
💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : F
🎪அத்தாட்சிகளை கொன்றொழித்தனர்
அடுத்த கட்டமாக தங்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட ஒட்டகத்தை அறுத்து வதை செய்ய முன் வந்தனர். இந்த ஒட்டகமானது மக்கள் மத்தியில் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்றும், அதற்கு அநீதி இழைக்ககூடாது என்றும் அல்லாஹுவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு அத்தாட்சியாக அனுப்பபட்டதாகும். ஆனால், அந்த மக்களோ அல்லாஹுவின் கட்டளையை மீறி அறுக்கத் துணிந்தனர்
"அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).
📓 அல்குர்ஆன் :11:64
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
📘 அல்குர்ஆன் :11:65
ஒட்டகத்தை அறுப்பதற்குப் பலர் கூடி முடிவெடுத்தாலும் அநியாயக்காரன் ஒருவன்தான் அதனை வெட்ட முன் வந்து வெட்டினான்.
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
📒 அல்குர்ஆன் :91:11
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
அல்குர்ஆன் :91:12
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
📕 அல்குர்ஆன் :91:13
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
📘 அல்குர்ஆன் :91:14)
🔋அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. (91:15)
பின்வரும் பொன்மொழியைச் சிந்திப்போம்
(ஸாலிஹ் - அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி(ஸல்) அவர்கள், 'ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூ ஸமஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்" என்று கூறினார்கள்.
📚 புகாரி 3377
அநியாயக்கார மக்களில் பலமும் செல்வாக்கும் மிக்க ஒருவன் அந்த அபூர்வ ஒட்டகத்தை கொன்றுவிட்டான். இதனை நினைவுகூர்ந்த இறைதூதர் (ஸல்) அவர்கள் ஸாலிஹ் நபி காலத்தில் ஒட்டகத்தைக் கொன்ற செல்வாக்குமிக்கவனுக்கு தமது காலத்தில் வாழ்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை உதாரணமாகக் குறிப்பிட்டார்கள். அவர்தான் அபூசம் ஆ அவரது முழுப்பெயர் அஸ்வத் பின் முத்தலிப் என்பதாகும். இவண் இறைமறுப்பாளனாக இருந்தவன். இந்த நபி மொழியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரழி) அவர்களின் பாட்டனாராவார். இவர் மிகுந்த செல்வாக்குடனும் வலிமையுடனும் திகழ்ந்தார். (உம்தத்தல் காரீ, இர்ஷாதுஸ்ஸாரீ).
தங்களுக்குத் தாங்களே வேதனையை வேண்டினர்:
அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அற்புதத்தை அநியாயமாகக் கொன்றொழித்ததோடு "நீர் எச்சரித்த வேதனையைக் கொண்டு வாரும் பார்க்கலாம்" எனத் தமது நாவுகளால் வேதனையை வேண்டினர். அதன் விளைவு அவர்களை இடியாலும் பூகம்பத்தாலும் அல்லாஹ் அழித்தான்.
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
📗 அல்குர்ஆன் :7:77
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
📓 அல்குர்ஆன் :7:78
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
📙 அல்குர்ஆன் :11:67
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.
📔 அல்குர்ஆன் : 11:68
ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தார் மாறு புரிந்து. அல்லாஹ் விஷயத்தில் அவர்கள் பிடிவாதம் கொண்டு உண்மையை ஏற்க மறுத்து, நல்வழியைப் புறக்கணித்துக் குருட்டு வழியில் சென்றதால் அவர்களை அல்லாஹ் அழித்தான். அவர்களை அழிந்த பின்னர் அவர்களை கண்டித்து நகைக்கும் முகமாக ஸாலிஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம் :👇
📝 உமாமாக்கள் குழுமம்🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 14 / 2 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment