⛵💧⛵💧⛵💧⛵💧⛵💧⛵
💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎓 ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் : A
💢 வலிமை மிக்க ஆது சமுதாயத்தின் அழிவிற்குப் பிறகு பல சமுதாயங்கள் இந்த புவியில் வந்து சென்றிருக்கலாம் என்றாலும் ஆது சமுதாயத்திற்கு அடுத்து அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறும் சமுதாயம் ஸமூது சமுதாயமாகும். இவர்களும் ஆது சமுதாயத்தைப் போன்று சிலைகளை வணங்கக்கூடியவர்களாகவே இருந்தார்கள். இவர்களின் சமுதாயாதைச் சார்ந்த இவர்களது சகோதரரான நபி ஸாலிஹ் (அலை) அவர்களயே இவர்களுக்கு இறைத்தூதராக அல்லாஹ் அனுப்பினான்.
💎 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை" (7:73)
'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான்.
📒 அல்குர்ஆன் :7:74
🍃 ஸமூது சமுதாயம் வாழ்ந்த இடம்:
இவர்கள் வாழ்ந்த இடத்தைப் பற்றி திருமறை குர்ஆன் குறிப்பிடுகையில் அவர்கள் ஹிஜ்ர் ஊர் வாசிகள் என்று குறிப்பிடுகிறது.
🌝 (இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
📘 அல்குர்ஆன் :15:80
🔵 அல்லாஹ் குறிப்பிடும் இந்த ஹிஜ்ர் என்ற ஊர் தற்போதும் உள்ளதா? என்று ஆராயும் போது பின்வரும் வசனம் அதற்கான விளக்கத்தை தருகின்றது.
🔋 ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
📙 அல்குர்ஆன் : 27:52
🎭 அல்லாஹ் இந்த வசனத்தில் "அவர்கள் வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன" என்று குறிப்பிடுகிறான். அப்படியென்றால் இன்றளவும் அவர்கள் வாழ்ந்த இடம், வசித்த வீடுகள் ஆகியன மனிதனின் படிப்பினைக்காக அவன் அறியும் விதத்தில் அவன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.
☘ இந்த விளக்கத்தின் அடிப்படையில் நபியவர்களின் பொன் மொழியை ஆராயும்போது ஸமூது கூட்டாத்தார் வசித்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிற்கும் தபூக்கிற்கும் இடையே அமைந்திருக்ககூடிய பகுதியில் ஒரு பகுதியாகும் என்பதை அறியமுடிகிறது.
👨👨👧👦 மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.
📕 புகாரி 3379
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம்:👇
📝 உலமாக்கள் குழுமம்🎖
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 11 / 2 / 17
🎯🔮🎯🔮🎯🔮🎯🔮🎯🔮🎯
,

No comments:
Post a Comment