*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் - 7🌍🌍*
*🎯சிறிய அடையாளங்கள்*
*10.பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*
🔘தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம்.
🔘அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக பள்ளிகள் கட்டப்படுகின்றன.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.*
*நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.*
*11.நெருக்கமான கடை வீதிகள்*
🔘அன்றைய காலத்தில் கடை வீதிகள் பெரிய அளவில் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தைகளில் தான் மக்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும்.
🔘ஆனால் இன்று கண்ட இடத்திலெல்லாம் கடைகளைக் காண்கிறோம்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.*
*நூல்: அஹ்மத் 10306*
*12.பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*
🔘ஆண்களும், பெண்களும் ஏறக்குறைய சம அளவில் தான் இருந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை.
🔘ஆனால் இன்று பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
🔘பெண் சிசுக் கொலை மூலம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்க கொடியவர் சிலர் முயற்சி செய்தும் கூட ஆண்களை விட பெண்கள் தாம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றனர்.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.*
*நூல்: புகாரி 81, 5231, 5577, 6808*
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 03-02-2017.
💐💐💐💐💐💐💐💐

No comments:
Post a Comment