Sunday, 5 February 2017

*📖 திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு தொடர் - 4


*📖 திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு*

*பாகம் 4*

*குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம்❓❓*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பலகடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள்.

🔘ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!

🔘கடவுளை நிர்வாணமாக வழிபட்டனர்!

🔘 பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!

🔘 குடம் குடமாக மதுபானங்கள் அருந்தினார்கள்!

🔘காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!

🔘பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!

🔘தந்தை இறந்து விட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வசாதாரணமாக இருந்தது!

🔘 சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!

🔘அரபுமொழி பேசுவோர் மட்டுமே மனிதர்கள் என்றும், மற்றமொழி பேசுவோர் அஜமிகள் (கால்நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் மொழிவெறி மிகைத்திருந்தது.

🔘 மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்!

🔘 தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காமல் விடமாட்டார்கள். அவரைத் தம்மால் பழி வாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செல்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.

🔘இத்தகைய ஒரு மோசமான சமூகம் உள்ள காலகட்டத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 05-02-2017.


No comments:

Post a Comment