*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
363:
🎯 *அ) ஃபிர்அவ்ன் கூட்டத்தார் மூஸா (அலை) அவர்களை எவ்வேளையில் பின் தொடர்ந்தார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:51-60"*
✅பதில் :
*_சூரியன் உதிக்கும் நேரத்தில்_*
ஆதாரம்:-
*அல்குர்ஆன்:* 26:60
📙பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
(அல்குர்ஆன் : 26:60)
🎯ஆ) *பெருமானார் அவர்கள் தம் வாழ்நாளில் எதில் உட்கார்ந்து உணவு அருந்தியதில்லை❓*
✅பதில் :
*_உணவு மேசையில்_*
ஆதாரம்:-
*ஸஹீஹ் புகாரி :5386,5415,6450*
📙5386. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📕5415. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், 'எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், '(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📕6450. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை; இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.40
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. சுஹைல் - திமிரி 2
4. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. சிக்கந்தர்-சென்னை(தாங்கல்) 2
7. சதாம் ஹுசேன் -திருநெல்வேலி 2
8. முகம்மது ரம்ஜான் அலி -திருநெல்வேலி 2
9. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
10. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
7. பத்ருத்தீன் -கடையநல்லூர் 2
⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *30-01-2017*
No comments:
Post a Comment